Saturday , October 23 2021

மண்புழு உரம் உற்பத்தி செய்யும் முறை

Share This

#மண்புழு_உரம்_உற்பத்தி_செய்யும்_முறை
🌳🍂🌿🍁☘️🌳🍂🌿🍁☘️🌳🍂🌿🍁☘️

மண்புழு உரம் என்றால்
அதன் களிவுகளே ஆகும்.

மண்புழு உரம் தயாரிக்க அமைக்கப்படும் தொட்டி செவ்வக வடிவில் இருக்க வேண்டும்.

அகலம் ஒரு மீட்டர் இருக்க வேண்டும்.
இடவசதிக்கு ஏற்ப நீளம் இருக்கலாம்.

அரை அடி ஆழத்திற்கு குழி வெட்டி, 2 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்( பொலித்தீன் கொண்டும் அமைக்கலாம்)

முதலில் தொட்டியின் அடியில் செங்கல் பரப்பி அதற்கு மேல் லேசாக மணலை பரப்பி பின்னர் பண்ணைக் கழிவுகளை மட்டும் நிரப்பி மண்புழு உரம் உற்பத்தி செய்யலாம்.

அந்த குழியில் 1/4 அடி உயரத்துக்கு தென்னைஓலை கழிவு அல்லது வாழை சருகு அல்லது கிளிசர்யா இலைகள் கொட்டி விட்டு.

அதன் மீது ” 1/2 அடிக்கு காய்ந்த எருவை பரப்பி,
அதன் மீது 1/2 அடிக்கு ஈரமான சாணத்தை கொட்டி அதில் 4-5 மண் புழுக்களை விடவேண்டும்.
பின்பு இதன் மேல் தோட்டமண்ணை லேசாக தூவி விடவேண்டும்.

குளிர்ச்சியான. நிழலான இடங்களிலே மேற்குறிப்பிட்டவற்றை செய்யவேண்டும்
அதோடு நாள்தோறும் லேசாக நீர் தெளித்து விடவேண்டும்,

30 நாட்களின் பின் கைகளால் மண்புழுவுக்கு சேதம் ஏற்படாத வண்ணம் தொட்டியில் உள்ள உரத்திணை கிளறிவிட வேண்டும்.

சாணத்தை உணவாக எடுத்துக் கொண்ட மண்புழுக்கள்வெளியேற்றும் கழிவுகள் அறுபதாவது நாளில் உரமாக கிடைக்கும்.

பண்ணையில் சேரும் கழிவுகளை, அடுத்ததடுத்த தொட்டிகளில் நிரப்பி சேகரித்து பயிர்களுக்கு இடலாம்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0094770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!