Thursday , October 14 2021

மரமுந்திரிகை பயிற்செய்கை

Share This

#லாபம்_தரும்_மர_முந்திரிகை_பயிற்செய்கைLF
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

‘கடும் வறட்சியை தாங்கும் முந்திரியை பயிரிட்டால், தொடர்ந்து 25 முதல் 30 ஆண்டுகளுக்கு, வருமானம் கிடைக்கும்.

ஏக்கருக்கு, ஒரு போகத்தில் 7 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டலாம்’ என்கிறார்கள் விவசாயி௧ள்:

25 – 30 ஆண்டுகள் வரை, நிலையான வருமானத்தை தரும். மேலும், கடும் வறட்சியை தாங்கி வளர்வதுடன், வடிகால் வசதியுடைய எல்லா வகை மண்ணிலும் இதை பயிரிடலாம்.
ஆனால் மணல் சார்ந்த மண் சிறப்பாக இருக்கும்.

ஏக்கருக்கு, 170 கன்றுகள் வீதம், ஜூன் – டிசம்பர் மாதங்களில், இதைக் கன்றுகள் அல்லது ஒட்டுக்கட்டிய முந்திரி கன்றுகளை நடவு செய்யலாம். 45 செ.மீ., நீள, அகல, ஆழ அளவிற்கு குழிகள் தோண்டி நடவேண்டும். ஒவ்வொரு குழிக்கும், 16 அடி இடைவெளி விட வேண்டும்.

அக்குழியில், 10 கிலோ மக்கிய தொழு உரம், குழியில் நிரப்பி, 3 – 6 மாத வயதுடைய, முந்திரி கன்றை நடவேண்டும்.

முந்திரிகையில், ‘தண்டுத்துளைப்பான்’ தாக்குதல் அதிகம் இருக்கும். சரியாக கவனிக்காமல் இருந்தால், அப்புழு தாக்கப்பட்ட மரங்களின் இலைகள் உதிர்ந்து, மரம் மொட்டையாக காட்சியளிக்கும்.

ஆண்டிற்கு, இரு முறை, மழை காலத்தின் முன்பும், பின்பும் மரத்தின் அடித்தண்டில் தரையிலிருந்து, 3 அடி வரை மண்ணெண்ணெய் மற்றும் தார் கலவையை பூசினால், இப்பிரச்னை தீரும்.

கன்றுகள் நட்ட, மூன்று ஆண்டுகளுக்கு பின்பே, முந்திரியை அறுவடை செய்ய முடியும். எனவே, இடைப்பட்ட காலத்தில் பப்பாளி, சர்க்கரை வள்ளி, உளுந்து, பச்சை பயறு, கச்சான், எள் போன்றவற்றை, ஊடுபயிர் செய்து, கூடுதல் லாபம் பெறலாம்.
போதுமானளவு நீர் ஊற்றி வந்தால் சிறிய மரமாக இருக்கும் போதே காய்க்க ஆரம்பிக்கும்.

காய்க்க ஆரம்பித்த முதல் ஆண்டில் வருமானம் சற்று குறைவாகவே இருக்கும்

அடுத்த ஆண்டுக்கு, 1 ஏக்கருக்கு, 3000 கிலோ முந்திரிக்கவிதைகள் வரை கிடைக்கும். 1 கிலோ, இலங்கையில் 250 தொடக்கம் 300 ரூபாய்க்கு விற்றால் கூட, ஏக்கருக்கு, 7.5 தொடக்கம் 9 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும்.

சிறந்த முறை பயிற்செய்கை யாக இருந்தால் மட்டுமே இந்த லாபம் கிடைக்கும்
இருப்பினும் மரமுந்திரிகை மரமானது மற்ற பயிர்கள் போன்று அல்லாமல் பராமரிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.

இது வறட்சியைத் தாங்கி வளரும் பயிர் என்பதால் மணல் பாங்கான இடங்களிலலும் மற்றும் நீர் தட்டுப்பாடு உள்ள பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் தயங்காமல் மரமுந்திரிகை பயிற்செய்கையை மேற்கொள்ளலாம்

அதோடு சந்தை வாய்ப்பினை பற்றி ஐயம் கொள்ள தேவையில்லை 100 வீதம் சந்தை வாய்ப்பு உள்ளது.

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!