Saturday , October 23 2021

மரவள்ளி பயிற்செய்கை தொழில்நுட்பம்

Share This

#அதிக_விளைச்சல்_தரும்_மரவள்ளி_பயிற்செய்கை_தொழில்நுட்பம்
🌳🌿🍁🍀🍃🍂🍃🌳🍁🍀🍃🍂🌳🌿🍁

மரவள்ளி நடுகை தொழில்நுட்பங்களை முறையாகப் பின்பற்றினால் கூடுதல் விளைச்சல் பெறலாம்.

இதற்கு செம்மண். மண் மற்றும் மணல் கலந்த பூமி ஏற்றது.
களிமண் மற்றும் வண்டல் மண்ணில் மரவள்ளி பயிர் செய்ய இயலாது.

மண்ணில் கார அமிலத் தன்மை 6 முதல் 6.5 சதவீதம் வரை இருத்தல் வேண்டும்.
மரவள்ளியை இறவையிலும், மானாவாரியிலும் நடுகை செய்யலாம்.
மலைப் பிரதேசங்களில் மானாவாரி முறையில் செய்யப்படுகிறது.

#மரவள்ளி இனங்களில்
4 மாதத்தில் அறுவடை செய்யக்கூடியது
6 மாதத்தில் அறுவடை செய்யக்கூடியது
9 மாதத்தில் அறுவடை செய்யக்கூடியது
12 மாதத்தில் அறுவடை செய்யக்கூடியது
என பல இனங்கள் உள்ளது.
இதில் 6 மாதத்திற்கு மேற்பட்ட ரகங்களே சிறப்பானதாக இருக்கும்

இறவையில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடவு செய்யலாம்.

#விதைக் கரணை தேர்வு,
நன்கு வளர்ச்சி அடைந்த நோய் தாக்காத செடிகளிலிருந்து விதைக் கரணைகளைத் தேர்வு செய்து,
குச்சிகளை நடுவதற்கு முன், இயற்கை முறையாக நிழலான இடங்களில் குச்சிகளை வைக்க வேண்டும்.

சில குச்சிகளின் கணுக்களுக்கு இடையில் சிறிய முளைகள் வரத் தொடங்கும்.
பின்பு குச்சியின் மேல் பாகம் மற்றும் அடிபாகத்தை நீக்கிவிட்டு நடுப் பாகத்திலிருந்து 15 செ.மீ. நீளமான தரமான குச்சிகளை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நடவு செய்யும் போது, கணுவின் பருக்கள் மேல்நோக்கி இருக்குமாறு நடுவது மிகவும் அவசியம்.
மரவள்ளி நடும் பொழுது இறவைப் பயிர்ச்செய்கை முறையாக இருந்தால்
90 × 90 செ.மீ. இடைவெளி இருத்தல் வேண்டும்.

மானாவரிப் பயிர்ச்செய்கை முறையாக இருந்தால் செடிக்குச் செடி 75 × 75 செ.மீ. இடைவெளி இருத்தல் வேண்டும்.

#நீர் நிர்வாகம்:
மரவள்ளி நட்ட மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் விட வேண்டும்
ஒரு மாதம் வரை 3 நாள்களுக்கு ஒருமுறையும்,
பின் 2-ஆம் மாதம் முதல் 7 மாதங்கள் வரை 7 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறையும், நீர் பாய்ச்ச வேண்டும்.

அதன்பின் அறுவடை வரை 20 நாள்கள் இடைவெளியிலும் நீர் பாய்ச்ச வேண்டும்.

பயிர் வளர்ச்சி வீதம் குறைவாக இருப்பதாக இருந்தால் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு ஜீவாமிர்தத்தை பயன்படுத்தலாம்

நோய்த்தொற்று சம்பந்தமான அறிகுறி ஏதும் இருந்தால்
இயற்கை முறையிலான கிருமி நாசினியை பயன்படுத்தலாம்

குச்சிகளை நட்டு ஒரு மாதத்தின் பின் ஐந்தாம் மாதம் வரை களை எடுக்க வேண்டும். நடவு செய்த 60-ஆம் நாளில் நன்றாக வளர்ந்துள்ள நிலையில் பக்கக் கிளைகள் வந்தால் அதனை அகற்ற வேண்டும்.

மிக முக்கியமான விடயம் மரவள்ளி செய்கையை பொறுத்தவரை செடிகளுக்கு குறுக்காக நடந்து செல்லக் கூடாது அதிலும் குறிப்பாக கிழங்கு பிடிக்க ஆரம்பிக்கும் காலத்தில் நடக்கக்கூடாது.
தேவை ஏற்படும் பட்சத்தில் மட்டுமே செடிகளுக்கு நடுவில் செல்ல வேண்டும்.

செடிகளுக்கு குறுக்காக அதிகளவில் நடந்து செல்வதால் கிழங்கு பிடிக்கும் வீதம் குறையும் அல்லது கிழங்கின் பெருப்பம் குறையும்.

#ஊடு_பயிர்.
இறவைப் பயிற்சிசெய்கை முறையாக இருந்தால்
ஊடுபயிராக சிறிய வெங்காயம், உளுந்து, பச்சைப்பயறு, கௌப்பி மற்றும் கொத்தமல்லி போன்ற குறுகிய காலப் பயிர்களை நடலாம்.

நடவு செய்த 60 தொடக்கம் 90 நாள்களில் ஊடுபயிரை அறுவடை செய்து, மேலுரம் இட்டு பின்னர் மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.

பயறு வகை சார்ந்த செடிகளை ஊடுபயிராக நட்டால்.
நுண்ணூட்டச் சத்துகள் பற்றாக்குறை இரும்புச்சத்து பற்றாக்குறை வர வாய்ப்பில்லை.

இளம் செடிகளில் உள்ள இலைகளில் வெளிர்பச்சை நிறமாகவோ அல்லது மஞ்சள் நிறமாகவோ இருந்தால்
இயற்கை முறையிலான மீன் அமிலம் பயன்படுத்தலாம்

#அறுவடை:
இப்பயிர் 8 முதல் 10 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும். அறுவடை செய்வதற்கு நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு முன் நீர் பாய்ச்ச வேண்டும்.

#விளைச்சல்
மானாவாரி பயிராக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 8 முதல் 12 மெட்ரிக் டன்னும், இறவைப் பயிராக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 16 முதல் 20 மெட்ரிக் டன் வரை விளைச்சல் பெறலாம்.

இறவை நடுகை முறையில் ஏக்கருக்கு 30 மெட்ரிக் டன் விளைச்சல் பெற்ற விவசாயிகளும் இருக்கின்றார்கள்.

இந்தப் பக்கத்தில் வரும் அனைத்து கட்டுரைகளையும் நீங்கள் தவறாமல் பார்க்க வேண்டுமா.?
அப்படி என்றால் எமது இந்தப் பக்கத்தில் நீங்கள் முதன்மை ரசிகராக உங்களை இணைத்துக்கொண்டால் எமது அனைத்து கட்டுரைகளையும் தவறாமல் உங்களாள் பார்க்க முடியும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!