Saturday , October 23 2021

மாட்டுப்பண்ணை அமைக்கும் முறை

Share This

#மாட்டுப்பண்ணை_அமைக்கும்_முறைLF
☘️🍂🌳🍁🌿☘️🍂🌳🍁🌿☘️🍂🌳🍁🌿☘️🍂🌳🍁🌿
🐄🐃🐂🐄🐃🐂🐄🐃🐂🐄🐃🐂🐄🐃🐂🐃🐂🐄🐃🐂

#நாட்டு_கறவை_இனங்கள்
நாட்டுப் பசுக்களில் பல இனங்கள் உள்ளன சஹிவால், கிர், தார்பர்கர், சிவப்பு சிந்து, தார்பார்க்கர், காங்கிரேஜ் ஆகியவை கறவைக்கு பயன்படும் நாட்டு இனங்கள் ஆகும்.

#அயல்நாட்டு_கறவை_இனங்கள்
ஜெர்சி, ஹோல்ஸ்டீன் ப்ரிசியன் போன்றவை அயல் நாட்டு கறவை இனங்களாகும்,

#கொட்டகை_அமைப்பு
கொட்டகையின் மோட்டு பகுதி உயரம் நிலத்திலிருந்து குறைந்தது 14 அடி இருக்க வேண்டும்.
கூரையின் தாவார பகுதி நிலத்திலிருந்து 9 அடி உயரம் குறைந்தது இருக்க வேண்டும்.
சுற்றுச்சுவர் உயரம் முறையே 5 அடி அளவு இருக்க வேண்டும்.
மீதம் 4 அடி காற்றோட்டமாக திறந்திருக்க வேண்டும்.
மழை காலங்களில் இதனை பொலித்தீன் படங்குகொண்டு அடைக்கக்கூடியவாறு அமைக்க வேண்டும்.
தீவனம் போட்டு ஒரு கால்நடைக்கு 2லிருந்து 2 ½ அடி இடைவெளியுடன் இருக்க வேண்டும்.

20 பசுக்கள் வளர்ப்பதற்கு
பசுக்களின் முகங்கள் ஒன்றை ஒன்று பார்த்தவாறு கொட்டகை அமைப்பதாக இருந்தால்.
குறைந்தது 40 அடி நீளமும் 24 அடி அகலமும் உடைய கொட்டகை அமைக்க வேண்டும்.

தேவையான அளவு குடி தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும். மேலும் தண்ணீர் தொட்டி தீவனத் தொட்டிக்கு அருகே அமைக்க வேண்டும்.

வெப்பப் பிரதேசங்களில் அமைக்கும் பண்ணைகளில் பண்ணை கூரையின் மேலே தூவல் பாசனம் செய்ய வேண்டும் காரணம் வெயில் காலங்களில் மேற்கூரையின் வெப்பத்தினை தணிப்பதற்காக.

#கன்றுகளுக்கான_கொட்டகை
பசுக்கொட்டகையின் ஒரு பக்கத்தில் சுற்றுச் சுவருடன் கூடிய போதுமான அளவுள்ள கொட்டகையை கன்றுகளுக்கு என தனியாக அமைக்க வேண்டும். இடவசதியானது கன்றுகளின் எண்ணிக்கைக்கேற்ப இருக்க வேண்டும்.
இதையடுத்து சுற்றுச்சுவருடன் கூடிய திறந்தவெளி இருக்க வேண்டும். இதில் கன்றுகள் சுதந்திரமாக உலவுமாறு அமைக்க வேண்டும்.

#மாட்டுக்_கொட்டகை
பால் தரும் பசுக்களைத் தனிக் கொட்டகை அமைத்து நன்கு பராமரிக்க வேண்டும். பசுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ஒரே வரிசையிலும்.
எண்ணிக்கை 10 இற்கு மேற்பட்டதாக இருந்தால் இரண்டு வரிசையாகவும் அமைக்கலாம்.

பொதுவாக ஒரு கொட்டகையில் 80லிருந்து 100க்குள் மட்டுமே பசுக்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும். பால் பண்ணைகளில் மாடுகள் இரண்டு வரிசையாகக் கட்டப்படும்போது அவைகளின் முகங்கள் ஒன்றையொன்று பார்த்தவாறோ அல்லது பின் பாகங்கள் ஒன்றையொன்று நோக்கியவாறோ அமைக்கலாம்.

#தீவன_மேலாண்மை
சினை மாடுகளுக்கு தீவனம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் கன்று வீசுதல், குறைமாத கன்றுக் குட்டியை ஈனுதல்,
20 கிலோவுக்கு குறைவாக கன்று பிறத்தல் போன்ற பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புள்ளது. நஞ்சுக்கொடி விழாமல் கருப்பையில் தங்கிவிடும். கருப்பை வெளித்தள்ளுதல், பால் காய்ச்சல் போன்ற நோய்கள் வரும். பால் உற்பத்தி குறையும்.

இதைத் தடுக்க சரிவிகித தீவனம் கொடுக்க வேண்டும். நன்கு வளர்ந்த ஒரு சினை மாட்டுக்கு கட்டாயம் 30 – 40 கிலோ பசுந்தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அளிக்க வேண்டும். கலப்புத் தீவனம் 7-வது மாத சினையில் தினமும் 1 முதல் 2 கிலோ வீதமும், 9-ஆவது மாதம் 2 முதல் 3 கிலோ வீதமும் கன்று ஈனும் வரை வழங்க வேண்டும்.

இவற்றுடன் தாது உப்புக்கள் 25- 30 கிராம் தினமும் கொடுக்கலாம். கன்று ஈனுவதற்கு முன்னால் ஒரு கிலோ கோதுமைத் தவிடும் கொடுக்கலாம். மேலும் 450 கிராம் உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூள் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.

வளரும் கன்றுகளுக்கு தாய்ப்பால் முடிந்தவுடன் தீவனம் சாப்பிட பழக்க வேண்டும். பச்சை தீவனம், வைக்கோல் ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.

மாடுகளுக்கு அளிக்கப்படும் நீரானது, சுத்தமாகவும் கிருமிகள் இல்லாமலும், துர்நாற்றமில்லாமலும் இருத்தல் மிகவும் அவசியம்.
அசுத்தமான நீரால் குடற்புழு நோய்கள், பாக்டீரியா எனும் நுண்ணுயிரி மூலம் தொண்டை அடைப்பான் நோய்கள் ஏற்படலாம். மாடுகளுக்கு அளிக்கும் நீருடன் கழிவு நீர் கலக்காமல் பார்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.

#கன்றுகளுக்கு_தீவனமளித்தல்
பிறந்த கன்றுக்கு முக்கியமான உணவு சீம்பாலாகும். கன்று பிறந்து 3-7 நாட்கள் வரை இந்த சீம்பாலானது மாட்டில் சுரக்கும், இதுவே கன்றின் முதல்நிலை ஊட்டச்சத்தாகும்.
சீம்பாலில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் தொற்று நோய்கள் மற்றும் ஊட்டசத்து குறைபாடுகள் கன்றுகளுக்கு வராமல் தடுக்கும். பிறந்த கன்றுக்கு சீம்பால் 5 நாட்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

கன்றுக்கு எல்லா நேரங்களிலும் தூய்மையான மற்றும் புதிய நீர் கிடைக்கச் செய்ய வேண்டும். இலைகள் மற்றும் மெல்லிய தண்டினை உடைய பயறு வகைககள் கன்றுகளுக்கு சிறந்த உலர்தீவனமாகும்.
கன்றுகளின் இரண்டு வார வயதிலிருந்து இதனை கொடுக்கலாம். பயறு வகைத் தீவனத்துடன் புல், வைக்கோலும் கலந்து அளிப்பது சிறந்தது.

ஆறு மாத வயதில், ஒரு கன்று ஒரு நாளைக்கு 2 முதல் 2.5 கிலோ புல் உண்ணும். கன்றின் வயது அதிகரிக்க அதிகரிக்க புல் உண்ணும் அளவும் அதிகமாகும். ஆறிலிருந்து எட்டாவது வாரத்தில் கூடுதலாக பதப்படுத்திய புல்லை கொடுக்கலாம். ஆனால் 6-8 வார வயதுக்கு முன்னரே கொடுக்க தொடங்கினால் கழிச்சலை உண்டாக்கும்.
பதப்படுத்திய புல், 4-6 மாதங்களிலிருந்தே நல்ல உலர்தீவனம் ஆகும். பொதுவாகப் பயன்படுத்தபடும் பதப்படுத்திய சோளம் தட்டுகளில் புரதம், கால்சியம் சத்து, மற்றும் வைட்டமின் குறைவாக இருக்கும்.

#இனப்பெருக்க_மேலாண்மை
சினை பருவத்திற்கு வந்த மாடுகள் கத்திக்கொண்டே இருக்கும். மற்றொரு மாட்டின் மீது தாவும். கண்ணாடி நிறத்தில், பிறப்புறுப்பு சற்று சிவந்து காணப்படும், கெட்டியாக திரவம் வழியும். பாலின் அளவானது தினமும் கொடுக்கும் பாலைவிட சற்று குறைவாகவே இருக்கும். இதுவே சினை பருவத்திற்கான அறிகுறியாகும். இந்த அறிகுறி தென்பட்டவுடன் மாடுகளை இனப்பெருக்கத்திற்கு உட்படுத்த வேண்டும்.

#கன்று_ஈனும்போது_காணும்_அறிகுறிகள்
நிறைமாத சினை ஆனவுடன் மாட்டின் வயிறு, மடி பெருத்துக் காணப்படும். மாட்டின் இடுப்பு, தொடைப் பகுதியில் உள்ள தசைகள் தளர்ந்து காணப்படும். வாலுக்கு அடியில் குழி உண்டாகும். இந்த அறிகுறி தென்பட்ட 24 முதல் 48 மணி நேரத்தில் கன்று ஈனும்.

மாட்டில் சளி போன்ற திரவம் அதிகளவில் வடியும். மாடுகள் அடிக்கடி படுத்துக் கொண்டும், தறையை தோண்டிக் கொண்டு இருக்கும். சினைக் கிடேரிகள் வயிற்றில் உதைத்துக் கொள்ளும்.

இந்த அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மாட்டை சுத்தமான, சமமான இடத்தில் அழைத்துச் சென்று கட்ட வேண்டும். கன்று ஈனுவதற்கு முன் கலப்பின பசுக்களில் நெஞ்சில் இருந்து மடி வரை நீர் வேர்த்துக் காணப்படும். இதனால் எந்தத் தீங்கும் இல்லை. கன்று ஈன்றவுடன் தானாக அவை மறைந்து விடும்.

பனிக்குடம் உடைந்த ஒரு மணி நேரத்தில் மாடு கன்றை ஈன்ற வேண்டும். கன்று ஈன்ற 6 மணி நேரத்தில் நஞ்சுக் கொடி விழ வேண்டும்.

#கன்று_வளர்ப்பு
கன்று பிறந்தவுடனேயே, அவற்றின் மூக்கு மற்றும் வாயில் எதேனும் கோழை மற்றும் சளி இருந்தால் உடனே துணி கொண்டு அகற்ற வேண்டும்.

உடம்பிலிருந்து 2-5 செ.மீ விட்டு தொப்புள் கொடியை நறுக்க வேண்டும். மேலும் இதற்கு அயோடின் அல்லது போரிக் ஆஸிட் அல்லது எதாவது ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தடவ வேண்டும்.

மாட்டின் மடி மற்றும் காம்பினை கன்று பால் ஊட்டுவதற்கு முன்பு குளோரின் கரைசல் கொண்டு சுத்தம் செய்து உலரவிட வேண்டும். கன்று அதன் தாயிடமிருந்து சீம்பாலினை ஊட்ட செய்யவேண்டும்.

#சுகாதார_மேலாண்மை
ஏதேனும் நோய் தாக்கினால் தாக்கப்பட்ட மாடுகளை தனித்தனிக் கொட்டகையில் மற்ற மாடுகளிலிருந்து பிரித்து வைக்க வேண்டும். அதற்கென போதுமான அளவு கொட்டில்கள் அமைத்தல் நல்லது. இக்கொட்டில்கள் மாட்டுக் கொட்டகையிலிருந்து சிறிது தொலைவில் இருக்குமாறு அமைக்க வேண்டும். ஒவ்வொரு கொட்டிலும் சரியான வடிகால் வசதி செய்யப்பட வேண்டும்.

கால்நடைப் பண்ணை தினசரி சுத்தம் செய்வது பல நுண்ணுயிரிகள் மூலம் பரவும் தொற்று நோயைத் தடுக்க உதவும். சுகாதாரமான பராமரிப்பிற்கு தினசரி நல்ல தண்ணீர் விட்டு கொட்டகையைக் கழுவுதல், சாணியை சுத்தப்படுத்த முறையான வடிகால் வசதி அமைத்தல் போன்றவை அவசியம். இது வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றிலிருந்து காக்க உதவும்.

தொழுவத்தில் ஆங்காங்கே நிழல் தரும் மரங்களை வைத்து, எப்பொழுதும் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

#விற்பனை
சினை மாடுகளை ஒன்பதாவது மாதத்தில் விற்பனை செய்ய வேண்டும். அப்பொழுது தான் விற்பனை லாபகரமாக அமையும்.

கன்று ஈன்ற பின்பும் விற்பனை செய்யலாம்.
கன்றுக் உரிய விலை என்னையும் சேர்த்து கொடுக்வேண்டும்.

பசு ஒரு அட்சயப் பாத்திரம் போன்றது. பசு கொடுக்கின்ற அனைத்தும் மதிப்பு மிக்கது. அதை சரியாக புரிந்துகொண்டால் எதுவுமே வீணாகாது.

சாணம், சிறுநீரை கொண்டு இயற்கை கிருமிநாசினி, இயற்கை பீடை நாசினி, இயற்கை களைநாசினி, தயாரித்து இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். யாகத்துக்கான வறட்டி தயார் செய்து விற்பனை செய்யலாம். பால் மட்டுமில்லாமல் அனைத்து பொருட்களும் விலைமதிப்பில்லாதது. சரியான வழிமுறைகளை பின்பற்றினால் மாடு ஒரு அட்சயப் பாத்திரம் தான்….!

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி..
laxci farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!