Thursday , October 14 2021

முயல் வளர்ப்பு

Share This

#லாபம்_தரும்_முயல்_வளர்ப்பு
🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇
🌳🍁☘️🍂🌿🌳🍁☘️🍂🌿🌳🍁☘️🍂🌿

பொதுவாக அதிகளவில் இனப்பெருக்கம் செய்யும் விலங்குகளில் முயலும் ஒன்று
முயல்கள் பொதுவாக வருடம் ஒன்றுக்கு 24 குட்டிகளுக்கு மேல் ஈணும்.

முயல் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் வளர்க்கப்படுகிறது.
முயல் வளர்ப்பதற்கு அன்றாடம் வீணாகும் காய்கறிகளும், தோட்டத்து இலைகளும் போதும்.

முயல் ஒரு வருடத்தில் 8 முறை குட்டிகள் போடும்.
ஆனால் 6 முறை குட்டி போட வைப்பதே சிறந்தது.

ஒவ்வொரு முறையும் 4 முதல் 8 குட்டிகள் போடும். இதன் சினைக்காலம் 30 நாட்களாகும்.

முயல்கள் பசும்புல் வகை, முளைவிட்ட பயறு வகையான கடலை, முழு தானியங்கள், புண்ணாக்கு, காய்ந்த அருகம்புல், மர இலைகளான அகத்தி, கல்யாண முருங்கை முதலியவற்றை உண்ணும்.

இரண்டு கிலோ எடை உள்ள முயல் 750 கிராம் எடையுள்ள பசுந்தழைகளை சாப்பிடும். வளரும் முயல்களுக்கு 25 கிராம் கலப்புத் தீனி தினமும் கொடுப்பது அதன் வளர்ச்சியை பெருக்க உதவும்.

அவை வசிக்க 1 1/2 முதல் 2 சதுர அடி மரக் கூண்டுகளே போதும். சிறிய முயல் குட்டிகள் பிறந்த 15 நாட்களுக்குப் பின் இலேசாகப் புல் கடிக்க ஆரம்பித்து 4 முதல் 6 வாரத்தில் தாங்களே சுயமாக வாழ பழகிக் கொள்கின்றன.

குட்டிகளை 6 வாரத்தில் தாயிடமிருந்து பிரித்த பின் தாய் முயலை சினைப்படுத்தலாம். இரண்டு ஆண் முயல்களையும், மூன்று பெண் முயல்களையும் முதலில் பராமரித்து நல்ல இலாபம் பெறலாம்.

பண்ணையாளர்கள் எந்த தொழில் செய்வதாக இருந்தாலும் முதலில் சந்தை வாய்ப்பு உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
நீங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு சந்தை வாய்ப்பு இல்லாத பட்சத்தில் தயவுசெய்து முயற்சிக்க வேண்டாம்.

முயல் வளர்ப்பை பொறுத்தவரை
முடிந்தவரை எம்மால் சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி தர முடியும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!