Thursday , October 14 2021

லாபம் தரும் குடைமிளகாய் பயிற்செய்கை

Share This

#லாபம்_தரும்_குடைமிளகாய்_பயிற்செய்கைLF
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌳

மக்களின் உணவில் அவசிய தேவை தக்காளி, வெங்காயம் என்று கூறுவார்கள். அதேபோல் மிளகாய் வத்தல், குடைமிளகாய் போன்றவையும் அதிகம் பயன்படுகின்றன.

இது பல நிறங்களில் காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு நிறங்களில் காணப்படுகிறது.

குடைமிளகாய் சாகுபடி – இரகங்கள்:
கே டீ பி எல் –19, பயிடாகி கட்டி ஆகிய இரகங்கள் குடைமிளகாய் பயிற்செய்கைக்கு ஏற்றவை.

குடைமிளகாய்
ஜூன் – ஜூலை மாதங்களில் பயிற்செய்கைக்கு செய்வதற்கு காலம் ஆகும்.

குடைமிளகாயை பொருத்தவரை வெப்ப வலயங்களில் இதன் வளர்ச்சி வீதம் குறைவாகவும் காய்க்கும் திறனும் குறைவாக இருக்கும்.
Greenhouse அமைத்து சூழலை குளிர்ச்சியாக்கி பயிரிடுவதன் மூலம் வெப்ப வலயத்திலும் இதனை சாத்தியப்படுத்த முடியும்

குடைமிளகாயை பொறுத்தவரை 24° Celsius க்கு உட்பட்ட கால நிலையிலே வளரக் கூடியதாக இருக்கும்

#மண்:
நல்ல வடிகால் வசதியுடைய, உவர்ப்புத் தன்மை இல்லாத களிமண், குடைமிளகாய் சாகுபடிக்கு ஏற்றது. 6.5 – 7.0 வரை கார அமிலத் தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும்.

#விதையளவு
ஒரு ஏக்கருக்கு 500 கிராம் விதைகள் வீதம் தேவைப்படும்.

குடைமிளகாய் விதைக்க முன்.
500 கிராம் விதைக்கு. 50 கிராம் வெப்பம் விதையினை பொடியாக்கி இதனோடு கலந்து விதைக்கவும்

நாற்றங்கால் தயாரித்தல்:
நாற்றங்கால் அமைக்க 1 மீ அகலம் மற்றும் நீளம் தேவைக்கு ஏற்றால் போல். உயரம் 15 செ.மீ கொண்ட படுக்கைகளை அமைக்க வேண்டும்.

விதைகளை 10 செ.மீ வரிசை இடைவெளியில் 0.5 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும்.

பின்பு 15 -20 கிலோ நன்கு மட்கிய உரம் மற்றும் 500 கிராம் NPK உரத்தினை விதைத்த, 16 நாளில் ஒவ்வொரு படுக்கைக்கும் அளிக்க வேண்டும்.

#நடுக்கைக்கு_நிலம்_தயாரித்தல்:
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறைகள் நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன் ஒரு ஏக்கருக்கு 15 டன் தொழுவுரம் அடி உரமாக இட்டு நன்கு உழவேண்டும்.

நடவு வயலில் 4 அடி அகலம் உடைய மேட்டுப் பாத்திகளை 1 அடி இடைவெளியில் அமைக்க வேண்டும். சொட்டு நீர் பாசனமாக இருந்தால் பக்கவாட்டுக் குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

நடுவதற்கு முன் நடவு வயலில் நீர் பாய்ச்ச வேண்டும்.
35 நாட்கள் வயதான செடிகளை 0.5 சதவீத சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கரைசலில் 30 நிமிடங்கள் நனைத்த பிறகு இரு வரிசை நடவு முறையில் 90 x 60 செ.மீ என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்:
நடும் பொழுது நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். அதன்பின் மூன்றாம் நாள் உயிர்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் மண்ணின் தன்மைக்கேற்ப பாசனம் செய்ய வேண்டும்.

#வளர்ச்சி ஊக்கிகளுக்கு
ஜீவாமிர்தத்தைப் பயன்படுத்தலாம்

#பீடை நாசினிகலுக்கு
கற்பூர கரைசல், பஞ்சகாவியா, புகையிலை கரைசல் போன்ற இயற்கை கிருமி நாசினிகளை பயன்படுத்தலாம்.

#காய்க்கும் திறனை அதிகரிக்க
தயிர் கரைசல், பெருங்காய கரைசலை பயன்படுத்தலாம்

#களை நிர்வாகம்:
நடவு செய்த 30 மற்றும் 60 நாட்களில் களையெடுத்து பராமரிக்க வேண்டும்.

நன்கு வளர்ச்சி அடைந்த செடிகளை நடவு செய்த 70ம் நாள் முதல் அறுவடை செய்யலாம். காய்களின் அளவைப் பொறுத்து தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

சிறிய வளைந்த மற்றும் உருமாற்றமுள்ள காய்களைத் தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.

குடை மிளகாயின் விளைச்சல் ஏக்கரில் 25 – 35 டன் காய்கள் வரை கிடைக்கும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!