Saturday , October 23 2021

லாபம் தரும் கொத்தவரை பயிற்செய்கை

Share This

#லாபம்_தரும்_கொத்தவரை_பயிற்செய்கைLF
☘️🌾🍃🌳☘️🌾🍃🌳☘️🌾🍃🌳☘️🌾🍃
🍑🌶️🍅🍋🌽🍎🍑🌶️🍅🍋🌽🍎🍑🌶️🍅

கொத்தவரை என்பது கொத்தாக காய்கள் உள்ள ஓரளவு வறட்சியைத் தாங்கி வளரும் செடியாகும். இது சுமார் 2 – 3 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது.

காய்கறிப்பயிராகவும், தீவனப் பயிராகவும், பசுந்தாளுரப் பயிராகவும் பயன்படுவதோடு, இத்தாவரத்தின் வேர் முடிச்சுகளில் வாழும் ரைசோபியம் என்னும் பாக்டீரியாவானது காற்றில் உள்ள நைட்ரஜனைக் கவர்ந்து மண்ணை வளப்படுத்துகின்றது.

பயறு வகைப் பயிர் என்பதால் புரதச் சத்து மிகுந்துள்ளது. கார்போஹைட்ரேட்டும், கொழுப்பும் மிகக் குறைவாகவே உள்ளது.

கொத்தவரைச் செடியைப் பயிர்செய்ய தண்ணீர் தேங்காத மணல் கலந்த தோட்டமண் ஏற்றது. உவர் நீர், உவர் மண்ணிலும் வளர்வது இதனுடைய சிறப்பாகும்.

ஜூன் – ஜூலை, அக்டோபர் – நவம்பர் மாதம் விதைப்புக்கு ஏற்றது. விதைகளை 1.5 × 2 இடைவெளியில் ஊன்ற வேண்டும்.

#விதையளவு:
ஒரு ஏக்கருக்கு 4 கிலோ விதை

விதைக்கும் முன்னர் 15-30 நிமிடம் நிழலில் உலர்த்த வேண்டும்

#ஊட்டச்சத்து_நிர்வாகம்
கடைசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு மக்கிய தொழு உரம் 10 டன்,
அடியுரமாக இடவேண்டும். நடவு செய்த 30வது நாளில் ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் ஜீவாமிர்தத்தை நீரில் கலந்து பயன்படுத்தவேண்டும்.

#அவரையை_தாக்கும்_நோய்கள்
இலை தத்துப்பூச்சி
காய்ப்புழு
இலைப்புள்ளி
சாம்பல் நோய்

கொத்தவரை. பெரும்பாலும் மற்ற பயிர்களைப் போன்று இல்லாமல் நோய்த் தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும்

இருப்பினும் மேற்குறிப்பிட்ட நோய்கள் தாக்குமாயின் செலவில்லாமல் இயற்கை முறையிலான கிருமி நாசினிகளை நாங்கள் பயன்படுத்த முடியும்.
( இயற்கை முறையிலான கிருமிநாசினி உற்பத்தி செய்யும் முறை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமாயின் எம்மை தொலைபேசி ஊடாக அழைக்கவும் )

சிறந்த முறையில் வளர்க்கப்பட்டால் விதைத்த 90வது நாளில் 3 டன் விளைச்சல் கிடைக்கும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0094770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!