Friday , October 22 2021

லாபம் தரும் கொய்யா பயிற்செய்கை

Share This

#லாபம்_தரும்_கொய்யா_பயிற்செய்கைLF
🌿🍂🌳🍁☘️🌿🍂🌳🍁☘️🌿🍂🌳🍁☘️
🍓🍋🍒🍊🍇🍎🍈🍓🍋🍒🍊🍇🍎🍑🍈

மெக்ஸிகோ நாட்டில் உள்ள கல்வில்லோ நகரம் தான் கொய்யாவின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கல்வில்லோ நகரில் நடக்கும் கொய்யா கண்காட்சி உலகப்புகழ் பெற்றதாகும்..

இந்தியா,இலங்கை,சீனா ,தாய்லாந்து,மியன்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.

கொய்யா செடியானது. வீட்டு தோட்டங்களிலும், வயலின் வரப்புகளிலும் வளர்க்கப்படும் மர வகையாகும்.

பயிரிடும் முறை
அலகாபாத். லக்னோ – 46. லக்னோ – 49. பனாரஸ், ரெட் பிளஷ். அர்கா அமுல்யா. அர்கா மிருதுளா,
ஆகிய ரகங்கள் உள்ளன.
ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் மாதங்கள் கொய்யா நடவு செய்வதற்கு ஏற்ற மாதங்கள் ஆகும்.

செம்மண்,கரிசல்மன்,களிமண் நிலங்களில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
பயிரிட தேர்வு செய்யப்பட்ட நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும். பின்பு 15 அடி இடைவெளியில் ஒன்றரை அடி நீள,அகல,ஆழ அளவில் குழி தோண்டி நடவேண்டும்.

ஒவ்வொரு குழிக்கும் 10 கிலோ தொழுஉரம், இட்டு மேல்மண் கலந்த கலவை கொண்டு குழியை மூட வேண்டும்.
பொலிதீன் பையில் அல்லது தொட்டியில் உள்ள செடிக்கு எவ்வித சேதமும் ஆகாமல் எடுத்து குழியின் மத்தியில் நடவேண்டும். மிக உயரமான நாற்றுகளாக இருந்தால், அதன் அருகே இரண்டு காய்ந்த குச்சிகளை நட்டு, கொய்யா செடி சாயாமல்.
செடியையும் குச்சியையும் இணைத்து கட்ட வேண்டும்.

கன்றுகள் நடவு செய்தவுடன்.
மண் இறங்கி இறுக்கம் அடையும் அளவுக்கு தண்ணீர் விட வேண்டும். பின்பு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் விட வேண்டும். அதன்பின் மண்ணின் ஈரத்தன்மையை பொறுத்து 2 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

#உரங்கள்_இடும்_முறை
மார்ச்,அக்டோபர் மாதங்களில் ஒவ்வொரு மரத்திற்கும். ஆட்டு உரம் 5 கிலோ, மண்புழு உரம் 2 கிலோ கலந்து. ஒவ்வொரு 6 மாதத்துக்கும் 2 அல்லது 3 அடி வட்டப்பாத்தியில் இட வேண்டும்.

கொய்யா செடியை சுற்றி களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். களைகளின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அதனை நீக்க வேண்டும்.செடியின் அடிபாகத்தில் குறுக்கும் நெடுக்குமாக தோன்றும் கிளைகளை நீக்க வேண்டும்.

மேல்நோக்கி நீண்டு வளரும் கிளைகளின் நுனியை கிள்ளி எடுத்து பக்கவாட்டு கிளை வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும். இல்லையெனில் கிளைகள் இல்லாமல் செங்குத்தாக வளரும்.

செடிகள் நட்டு 1 1/2 வருடத்திலிருந்தே காய்க்க ஆரம்பித்து விடும். பூத்ததிலிருந்து 5 மாதங்கள் இடைவெழியில் கனிகளை அறுவடை செய்யலாம்.
ஒரு ஏக்கருக்கும் 10 டன் வரை விளைச்சல் கிடைக்கும்.
ஊடுபயிராக குறைந்த வயதுடைய பயறு வகை செடிகள், அவரை, கத்தரி ஆகியவற்றை கொய்யா கிழைகள் வரும் வரை வளர்க்கலாம்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!