Thursday , October 21 2021

வசம்பு பயிர்ச்செய்கை

Share This

#லாபம்தரும்_வசம்பு_பயிர்ச்செய்கைLF
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

இயற்கை மருத்துவத்தில் வசம்பு பல விதங்களில் பயன்படுகிறது என்பதனை அனைவரும் நன்கு அறிவோம்.

வசம்பு ஒரு ஏக்கரில் பயிர் செய்தால் ஆண்டு வருமானம்.
25 – 30 லட்சம் வரை கிடைக்கும்.
ஆச்சரியமாக உள்ளதா.?
இது அதிகமானோருக்கு நிச்சயம் தெரியாது ஆனால் இதுதான் உண்மை

வசம்பு, இஞ்சி தாவரவியல் குடும்பத்தைச் சார்ந்தது. இவைகள் 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரக்கூடிய பயிர்வகையாகும்.
வசம்பு வேர்கள் சரியாக 50 முதல் 60 கிராம் எடையுள்ளவை.

வேர்கள் மஞ்சள் கிழங்கினைப் போன்று நெருக்கமான கணுக்களை உடையது. வேர்கள் ஒரு மீட்டர் வரை அகலமாகப் படரும். பக்க வேர்கள் வேகமாக வளரும் தன்மை உடையவை.

களிமண் மற்றும் நீர்பிடிப்புள்ள மண் வகைகள் பயிரிடுவதற்கு மிகவும் ஏற்றவை. ஆற்றுப் படுகையில் நீரோட்டம் உள்ள ஓரங்களில் இதனை பயிர் செய்யலாம். நெற்பயிர்செய்கைக்கு உகந்த நிலங்கள். மற்றும் சதுப்பு நிலங்களில் வசம்பு பயிரிடுவதற்கு ஏற்றதாகும்.

வெப்பமான தட்பவெப்ப நிலையில் நன்றாக வளரும்.
ஆனால் ஆண்டு முழுவதும் சீரான மழையளவு இருப்பது அவசியம். செடிகளின் துரித வளர்ச்சிக்கு அதிக அளவு சூரிய ஒளி இருப்பது நல்லது.

1 ஏக்கருக்கு 600 கிலோ கிழங்கு தேவைப்படும்.
நீர்க்கசிவு உள்ள இடங்களைத் தேர்வு செய்து ஒரு ஏக்கருக்கு 10 டன் தொழு உரமிட்டு மண்ணில் தண்ணீர் தேங்கும் வண்ணம் சேற்று உழவு செய்து பண்படுத்த வேண்டும்.

விதைக்கிழங்குகளை 30 செ.மீ. இடைவெளியில் நேர்கோடுகளில் நாட்ட வேண்டும்.
வரிசையில் விதைக்கப் பட்ட கிழங்குகள் அடுத்த வரிசையில் விதைத்த கிழங்குகளுக்கு நேராக இல்லாமல் இரண்டு கிழங்குகளுக்கு மையமாக விதைக்க வேண்டும். இதனால் வேர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

மண்ணில் எப்போதும் ஈரத்தன்மை இருக்குமாறு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். விதைத்த முதல் இரண்டு மாதங்களுக்கு 5 செ.மீ. உயரம் தண்ணீர் நிறுத்தப்பட வேண்டும். பிறகு 10 செ.மீ. உயரத்திற்கு தண்ணீர் நிறுத்த வேண்டும்.

விதைத்த ஒரு மாதத்திலும் பிறகு இரண்டு மாதங்கள் இடைவெளியிலும் 2 அல்லது 3 முறை களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை களை எடுக்கும் போதும் வரும் வசம்பு வேர்களை காலால் மிதித்து ஆழமாக மண்ணில் அழுத்திவிட வேண்டும். இதனால் கிழங்குகளின் வளர்ச்சியினை துரிதமடையச் செய்யலாம்.

#அறுவடை
வசம்பை பொருத்தவரை இலைகள் பழுப்பு நிறமாகி நுனி கருக ஆரம்பித்தால் அறுவடைக்குத் தயாராகி விட்டது என்று அர்த்தம்.
கிழங்கு தரமான தலையை அடைய 8 மாதங்கள் ஆகும்.

அறுவடை செய்வதற்கு முன் வயலில் உள்ள நீரை வடித்து மண்ணை சிறிதளவு காயப்போட வேண்டும்
பிறகு இலைகள் பழுப்பு நிறமாக மாறிக் காய்ந்துவிடும்.

மண்ணைத் தோண்டி கிழங்கு மற்றும் வேர்களை அறுவடை செய்யலாம். இந்த சமயத்தில் கிழங்குகளை கவனமாகத் தோண்டி எடுத்த 5 முதல் 7 செ.மீ. நீளத்தில் வெட்ட வேண்டும்.

பக்க வேர்கள் அனைத்தையும் நீக்கிவிட வேண்டும். தண்ணீரில் கிழங்குகளைக் கழுவி வெயிலில் உலர்த்த வேண்டும். உலர்த்தப்பட்ட கிழங்குகளின் மேல் உள்ள செதில் பகுதியை நீக்குவதற்காக சாக்குப்பையில் போட்டு நன்றாகத் தேய்க்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு சராசரியாக 5 தொடக்கம் 7 டன் உலர்ந்த கிழங்குகள் கிடைக்கும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!