Thursday , October 21 2021

வறட்சியிலிருந்து தென்னையை பாதுகாக்க எளிய வழிமுறைகள்

Share This

#வறட்சியிலிருந்து_தென்னையை_பாதுகாக்க_எளிய_வழிமுறைகள்LF
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

மழையின்மையால், அடிக்கும் வெயிலில் நிலவும் உஷ்ணமும், மனிதர்களை மட்டுமல்லாது, விலங்குகள் மற்றும் விவசாய பயிர்களையும் கடுமையாக பாதிக்கிறது.

தென்னை விவசாயிகள், வறட்சியை எப்படி எதிர்கொண்டு, தென்னை பயிர்களை பராமரிப்பது என்பது தெரிந்துக் கொள்ள வேண்டும். அதற்கு கீழ்கண்ட முறைகளை கடைபிடிக்கலாம்

#மண்_மூடாக்கு
வறட்சி காலத்தில் பெரிய பிரச்னையாக இருப்பது, பாசனம் செய்யும் நீர், பயிர்களுக்கு முழுமையாக கிடைக்காமல், வெப்பத்தில் ஆவியாகி விடுவது தான். இதை தவிர்க்க, தென்னை மரத்துக்கு பாசனம் செய்யும் பாத்தியில் மேல் மூடாக்கு அமைக்க வேண்டும்.

ஒவ்வொரு பாத்திக்கும், 15 தென்னை ஓலைகள், தேங்காய் மட்டைகள் அல்லது தென்னை நார் கழிவுகளை பரப்பி, சூரிய ஒளி படுவதை தடுப்பதன் மூலம், பாசனம் செய்யும் நீர் ஆவியாவதையும், ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்து, வறட்சியின் பாதிப்பை குறைக்கலாம்.

நிலத்தில் இவ்வாறு மூடாக்கு அமைப்பதனால் கறையான் புடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது ஆகையால் அவ்வாறு கறையான் பிடிக்கும் பட்சத்தில் ஜீவாமிர்தத்தில் சிறிது வேப்பெண்ணெய் மற்றும் சாம்பல் கலந்து தெளிக்கலாம்.
தென்னை மரத்துக்கு தேவையான நுண்ணுயிர் வளர்ப்பு ஊக்கியாகவும் பயன்படும்.

தென்னை மரத்தின் அடிப்பகுதியில் இரண்டு அல்லது மூன்று கற்றாழை கன்றுகளைநாட்டு வதன் மூலம் ஈரப்பதத்தை தக்க வைக்கவும் முடியும் அதோடு காய்க்கும் திறனை அதிகரிக்கவும் முடியும் வேர்களைத் தாக்கும் கறையான் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்தவும் முடியும்.

#நீர்_மேலாண்மை
மரங்கள் பட்டுப்போவதை தடுக்க, சொட்டு நீர்ப் பாசனம் என்றால், ஒரு மரத்திற்கு, ஒரு நாளைக்கு குறைந்தது, 65 லிட்டரும், வாய்க்கால் பாசனம் என்றால், ஒரு மரத்திற்கு, 5 நாட்களுக்கு ஒரு முறை, 400 லிட்டரும் பாசனம் செய்வது நல்லது.

#ரசாயன_உரங்கள்_வேண்டாம்
வெயில் தாக்கம் அதிகமுள்ள இந்த மாதங்களில், யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட எந்த ரசாயன உரத்தையும் தென்னைகளுக்கு அளிக்க வேண்டாம். அதற்கு பதில், ஆட்டு எரு, மாட்டு எரு, மக்கிய உரம், மண்புழு உரங்களை அளிக்கலாம். இயற்கை, உயிர் உரங்களை அளிப்பதே நல்லது.

#குரும்பை_உதிர்தல்
பாசன பற்றாக்குறை மற்றும் நிலவும் வெப்பத்தின் காரணமாக, பரவலாக காணப்படும் பிரச்னைகளுள் ஒன்று, குரும்பை உதிர்வது.
அதிகளவில் குரும்பைகள் உதிர்வதால், உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும். குரும்பை உதிர, வெயில், பாசன பற்றாக்குறை மட்டுமின்றி, நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையும் காரணமாக உள்ளது.

மண்ணின் கார அமிலத்தன்மை: PH தன்மைக்கு ஏற்றவாறு சுண்ணாம்பு சத்து அளவுகளை நிர்ணயித்து இடுதல் அவசியமாகும்.

மேலும் குரும்பை உதிர்வதை கட்டுப்படுத்த இயற்கையான முறையில் மாற்று வழிகளும் உள்ளது.
ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளுங்கள்

நீண்ட காலம் பராமரித்து வளர்க்கும் தென்னையை, வறட்சி பாதிப்புகளில் இருந்து கவனமாக பாதுகாத்தால் மட்டுமே, அடுத்து வரும் ஆண்டுகளில் முழுமையான உற்பத்தியை பெற முடியும். இதை கவனத்தில் கொண்டு விவசாயிகள் செயல்பட வேண்டும்.

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!