Friday , October 22 2021

வறட்சியில் கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவது எப்படி?

Share This

#வறட்சியில்_கால்நடைகளுக்கு_தீவனம்_வழங்குவது_எப்படி?
🌳🍁☘️🌿🍂🍃🌳🌾🍁☘️🌿🍃🌳🍂☘️

அகத்தி, வேம்பு, பூவரசு, பலா, கொடுக்காப்புளி, ஆல , அரச, இலந்தை போன்ற மரங்களின் இலைகளை வறட்சியின் போது தீவனமாகக் கால்நடைகளுக்கு பயன்படுத்தலாம்.

மர இலைகளை தீவனமாக வழங்கும்போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இதன்படி மர இலைகளை பிற புல் வகைகள் மற்றும் உலர்ந்த தீவனங்களுடன் சிறிது சிறிதாக நறுக்கி கொடுக்க வேண்டும்.

வழங்குவதற்கு முன் 2 மணி நேரம் இலைகள் வாட வேண்டும்.

இலைகள் உலர்ந்து இருந்தால் உப்பு அல்லது சர்க்கரைக் கரைசலை தெளிக்கலாம். இலைகளை விரும்பி சாப்பிடாத கால்நடைகளும் விரும்பி சாப்பிடும்.

மாலை அல்லது இரவு நேரங்களில் தீவனமிட்டால் கால்நடைகள் நல்ல முறையில் உண்ணும்.

#குறிப்பு
வெயில் காலங்களில் கால்நடைகளை கடும் வெயில் நேரத்தில் அதாவது காலை 11:00 மணி முதல் பகல் 3;00 மணி வரை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது.

நல்ல சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும்.

தீவனத் தட்டைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொடுத்தால் கழிவுகள் குறையும்.

மழையின்றி வாடும் இளம் சோளப்பயிரில் மாடுகளை விட்டு மேய்க்கக்கூடாது.

இளம் சோளப்பயிரில் ‘சைனிக் அமிலம்’ நச்சுத்தன்மை உடையதால் இதனை சாப்பிடும் கால்நடைகள் இறக்க நேரிடலாம்.

முழுத் தீவனத்தையும் ஒரே நேரத்தில் கொடுக்காமல் இரண்டு, மூன்று தடவை பிரித்து கொடுக்கலாம்.

கால்நடைகள் பழக்கத்துக்கு அடிமையானவை எனவே, தீவனத்தில் திடீரென மாறுதல் செய்யக்கூடாது.

ஒரே நேரத்தில் மொத்த தீவனத்தையும் கொடுத்தால் கால்நடைகளுக்கு வயிறு உப்புசம், அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்படும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!