Thursday , October 14 2021

வீரியம் கூடிய கற்பூர கரைசல் தயாரிக்கும் முறை

Share This

#வீரியம்_கூடிய_கற்பூர_கரைசல்_தயாரிக்கும்_முறை_LF
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

இது இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் கிருமிநாசினி ஆகும்.

பண்ணையாளர்கள்,விவசாயிகள் மற்றும் வீட்டுத்தோட்டம் செய்யும் அனைவரும்
இலகுவான முறையில் செலவில்லாமல் உற்பத்தி செய்துகொள்ள முடியும்.

#செய்முறை
1 லிட்டர் கரைசல் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்.

கோமியம்(மாட்டு சிறுநீர்) – 1 லீட்டர்
கற்பூரம் – 40g
வெள்ளைப் பூண்டு – 150g
உறைப்பு உள்ள பச்சை மிளகாய் – 100g
வேப்பம் விதைகள் -100g
பெருங்காயம் – 15g

ஒரு பாத்திரத்தில் கற்பூரம்,வெள்ளைப் பூண்டு,பச்சை மிளகாய், வேப்பம் விதை,பெருங்காயம்.
அனைத்தையும் நன்கு இடித்து எடுத்து
மற்றொரு பாத்திரத்தில் கோமியத்தோடு இட்டு 2 நாட்கள் கலக்கிவிடவேண்டும்.

பின்பு இந்த கரைசலை நன்கு வடிகட்டி எடுத்து.
ஒரு லிட்டர் கரைசலுக்கு. 7 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.

இக்கரைசலை பயன்படுத்தியபின் பீடைகளின் நடமாட்டத்தை அறிந்துகொண்டு இக்கரைசலின் வீரியத்தை கூட்டுவதா அல்லது குறைப்பதா என்பதனை நீங்களே தீர்மானிக்கலாம்.

ரசாயனத்தை தவிர்த்து இயற்கைக்கு மாறுவதே எமக்கும் மற்றும் எமது அடுத்த தலைமுறையினருக்கும் ஏற்றதாகும்.

யூரியா முற்றிலும் அபாயம்
ரசாயன முறையில் உற்பத்தியாகும் காய்கறிகளை மற்றவர்கள் மட்டும் தான் பயன்படுத்த போகின்றார்களா.?
இல்லை நமது பிள்ளைகள் நமது குடும்பத்தாரும் தான் பயன்படுத்துவார்கள்.

#குறிப்பு
ஒரு மாதத்திற்கு உட்பட்ட சிறிய பயிராக இருந்தால். கற்பூரம் 25 கிராம் மட்டுமே இக்கரைசலில் பயன்படுத்த வேண்டும்.

இக் கரைசலை 15 நாள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம் அதன் பிறகு இதற்கு ஈடான வேறு இயற்கை கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும்.

காரணம் தொடர்ந்து ஒருவகை கிருமிநாசினியை பயன்படுத்தும்போது பூச்சிகள் அதற்கு இசைவாக்கப்பட்டு போக வாய்ப்புள்ளது.

இதற்கு மாற்றாக பல இயற்கை கிருமிநாசினிகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!