Friday , October 22 2021

ஹரியானா பசு பற்றிய தகவல்

Share This

#ஹரியானா_பசு_பற்றிய_தகவல்LF
🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

ஹரியானா மாடு (Hariana ) என்பது வட இந்தியாவில் உள்ள ஹரியான மற்றும் கிழக்கு பஞ்சாப் பகுதிகளை பூர்வீகமாக‍க் கொண்டவை. இவை இண்டிகா சீபு மாட்டினத்தில் அறியப்பட்ட 75 இனங்களில் ஒன்றான நாட்டு மாட்டினமாகும்.

இது ஹரியானா மாநிலத்தின் ரோத்தக் மாவட்டம், கர்னால் மாவட்டம், ஜிந்து, ஹிசார், குருகிராம் போன்ற மாவட்டங்களை தற்பொழுது அதிகமான பசுக்கள் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.

வட இந்தியாவில் இந்த வகை மாடுகளுக்கு அதிகளவில் முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

இந்த மாடுகள் நடுத்தர அளவு முதல் பெரிய அளவுவரை உள்ளன, இவை பொதுவாக சாம்பல் நிறம் திட்டுக்களுடன் வெண்மையாக உள்ளன.

இது வெப்ப வலயங்களில் வளரக்கூடிய இனமாகும்.
வட இந்தியாவில் உள்ள பண்ணைகளில் அதிக அளவாக வளர்க்கப்படுகின்றது
தற்பொழுது தென்னிந்தியாவிலுள்ள பண்ணைகளிலும் வளர்க்கத் துவங்கி உள்ளார்கள்.

இருப்பினும் பெரும் பண்ணைகளில் பால் உற்பத்திக்காக இந்தவகை பசுக்களை வளர்ப்பது மிக குறைவாகவே உள்ளது
காரணம் நடுத்தர அளவிலான பால் உற்பத்தி இருப்பதே ஆகும்.

இவற்றின் கொம்புகள் குறுகியதாகவும் அதன் முகம் குறுகி நீண்டதாக இருக்கும். இந்த மாடுகள் மிகவும் நல்ல பால் தருபவையாகவும், மற்றும் எருதுகள் நன்கு வேலை செய்பவையாகவும் உள்ளன.
இவை கறவை உழைப்பு ஆகிய இருநோக்கங்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.

இதன் எடை 275 -325 கிலோ வரை வளரும்.
இந்தப் பசுக்கள் நிறத்தில் வேறுபட்டிருந்தாலும் சிந்தி பசுக்களுக்கு இணையாகவே இருக்கும
வெப்பமான சூழலிலும் வாழ பழகிக் கொண்டவையாகும்.

பிறந்த கன்றுகள் சுமார் 36 மாதங்களில் பருவ வயதை அடைகின்றன.
இந்த இன மாடுகளின் ஆயுட்காலம் சுமார் 16 ஆண்டுகள்.
சுமார் 13 கன்றுகள் வரை ஈனும்.
ஒவ்வொரு கன்றுக்கும் இடையிலுள்ள தூரம் 14 மாதங்கள் வரை ஆகும்.

நாம் அளிக்கும் தீவனத்தை பொறுத்து ஒரு நாளைக்கு சுமார் 6 முதல் 10 லிட்டர் பால் சாதாரணமாக கறக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.
இதன் பாலில் நன்மை செய்யக்கூடிய கொழுப்புச்சத்து அதிகமாகவே உள்ளது.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி..
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!